சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

LYRICS
சின்னஞ்சிறு பாலகனே
தாவீதின் குமாரனே
பெத்தலையில் பிறந்தவரே
இயேசு ராஜா
தாழ்மையான கோலத்திலே
ஏழ்மையான எங்களையும்
மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா

அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்
வல்லமையுள்ளவரும் நீரே நீரே
எனைத் தேடி வந்தவரும்
என்னோடு இருப்பவரும்
புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே


மார்கழி மாதத்திலே
பனி பொழியும் நேரத்திலே
மாசற்ற ஜோதியாய்
மண்மீது அவதரித்தார்
நட்சத்திரம் வழிகாட்ட
ஞானிகளும் பின்தொடர
பெத்தலையில் இயேசுவை
தொழுது கொண்டனரே
சின்னஞ்சிறு

அன்னைமரி பாலகனாய்
யோசேப்பின் குமாரனாய்
தேவனின் மைந்தனாய்
மண்மீது உருவெடுத்தார்
தூதர்கள் தோன்றிட
மேய்ப்பர்கள் நடுங்கிட
மன்னவர் இயேசுவை
தொழுவத்தில் கண்டனரே
சின்னஞ்சிறு

Leave a Comment